செந்தமிழர் பாசறை குவைத் – பொங்கல் திருவிழா

197

சார்பாக கடந்த 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று எட்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது

நிகழ்வுத் துளிகள்:
 காலை 10.00 மணிக்கு குவைத் மகளிர் பாசறை உறவுகள் பொங்கல் வைத்து இயற்கைக்கு படைத்தனர். பின்னர் உறவுகள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டது.
 காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
 நண்பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரை தலைவாழை இலையில் விருந்தளிக்கப்பட்டது..
இந்த பொங்கல் சிறப்பு விருந்தில் நிகழ்வுக்கு வருகை புரிந்த 600 க்கும் மேற்பட்ட உறவுகளுக்கும் விருந்தளிக்க உதவிசெய்த பெருந்தகை, M.A ஹைதர் குழுமத்தின் நிறுவனர், ‘வெற்றித் தமிழர்’ ஐயா முனைவர் செ.மு. ஹைதர் அலி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
 மதியம் 2.30 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள், மூத்த பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் மங்கள விளக்கு ஏற்ற மேடை நிகழ்வுகள் ஆரம்பமானது.
 அக வணக்கம், வீரவணக்கம், உறுதிமொழியை மழலையர் பாசறையின் கிசோர் கண்ணன் ஏற்றார்.
 மேடை நிகழ்வுகளை குவைத் மகளிர் பாசறையின் திருமதி. சித்ராதேவி அவர்கள் மற்றும் திருமதி. வயலட் சுகந்தி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
மழலைகள் காவியா கார்த்திகேயன் மற்றும் பரேஸ்பாலா திருக்குறள் வாசித்தனர்.
வளைகுடா செய்தித்தொடர்பாளர் திரு.அருண் தெலஸ்போர் அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி சிறப்பு செய்தார்கள்.
 குவைத் செந்தமிழர் பாசறையின் துணைத் தலைவர் திரு. சந்திர மோகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 வானதிர தமிழர்களின் ஆதி இசையான பறை இசையை திரு. கல்யாண முருகேசன் அவர்களின் தலைமையிலான குவைத் செந்தமிழர் பறை இசைக் குழுவினர் முழங்கினார்கள்.
 குவைத்தில் இயங்குகின்ற தமிழ் அமைப்புகளான பொங்குதமிழ் மன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச்சங்கம், குவைத் தமிழ் இசுலாமியச் சங்கம்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திரு. ஆல்வின் ஜோஸ், நந்தவனம், மனித நேய கலாச்சாரப் பேரவை, தமிழோசை கவிஞர் மன்றம், குவைத் தமிழ் சோசியல் மீடியா, உலகத் தமிலர் செய்தி, RKG அறக்கட்டளை போன்ற மற்ற தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
 செந்தமிழர் பாசறை வளைகுடாவின் செயலாளர். திரு. இரவிவர்மன் அவர்கள் எழுச்சி உரை வழங்கினார்கள்.
 M.A ஹைதர் நிறுவனக் குழுமத்தின் தலைவர் ஐயா முனைவர் செ.மு. ஹைதர் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 தாயகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினரான நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு. மணி செந்தில் அவர்கள் பண்பாட்டுப் பேருரையாற்றினார்கள்.
 தமிழ்த் தேசிய நாட்காட்டியை சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் மணி செந்தில் அவர்கள் வெளியிட செந்தமிழர் பாசறை வளைகுடா செயலாளர் திரு. இரவிவர்மன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இறுதி நிகழ்வாக திரு ஜார்ஜ் அவர்களின் நன்றியுரைடன் மாலை 8.00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.
இந்த இனிய தமிழர் பண்பாட்டு நிகழ்வில் எங்கள் அழைப்பை ஏற்று எங்களுடன் இறுதிவரை அமர்ந்து இந்நிகழ்வினை சிறப்பித்துத் தந்த சிறப்பு அழைப்பாளர்களான,
  M.A ஹைதர் நிறுவன தலைவர் ஐயா முனைவர்.செ.மு.ஹைதர் அலி அவர்கள்;
வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கம. மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள்,
குவைத் தமிழ் சோசியல் மீடியா மற்றும் உலகத் தமிழர் செய்திகள் ஊடக நிர்வாகிகள்,
குவைத் மனித உரிமை செயல்பாட்டாளர் திரு. ஆல்வின் ஜோஸ்;
மனிதநேய மக்கள் ஜனநாயக பேரவை நிர்வாகிகள்,
தமிழோசை கவிஞர் மன்றம்,
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க நிர்வாகிகள்,
பொங்கு தமிழ் மன்றம் நிர்வாகிகள்,
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம்;
நந்தவனம் பள்ளி நிறுவனர்,
RKG அறக்கட்டளையின் நிறுவனர்
திரு.அறந்தை கணேசன்
தமிழ் ஆர்வலர் திரு. பா.சேகர் அவர்கள்
ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும்
இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற பொருளாதார பங்களிப்பு செய்த
சரவணா உணவகம்- மங்காப்;
குமார் பிள்ளை உணவகம்- மெகபுலா;
மகாராஜா உணவகம் – பர்வானியா;
மூவேந்தர் உணவகம் -பர்வானியா;
திண்டுக்கல் உணவகம்-சால்மியா;
ஜம்ஜம் உணவகம் திருச்சி;
மெரினா கண்ணாடியகம் – பாகில்
ஆகிய உரிமையாளர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மதியம் அறுசுவை விருந்து வழங்கிய TVS குழுமத்தின் நிறுவனர் ஐயா செ.மு.ஹைதர் அலி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிகழ்வினை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்திய குவைத் செந்தமிழர் பாசறையின் தலைவர் திரு. தமிழன் ரகு, செயலாளர் திரு. செந்தில், பொருளாளர் திரு. கல்யாண முருகேசன் மற்றும் விழா ஒருங்கிணைப் குழு, அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைச் செல்வங்களுக்கும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஒருங்கிணைத்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பாராட்டுகளும், செந்தமிழர் பாசறை குவைத் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது