*நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின்
மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாள் : 20/11/2022
நேரம்: மாலை 3மணி
இடம்:
மாநில ஒருங்கிணைப்பாளர்
சட்டத்தரணி. அண்ணன் சிவகுமார் அவர்கள் தோட்டம் (நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே.)
*கலந்தாய்வுக்கான நோக்கம்*:
#வருகின்ற 26 ஆம் தேதி *தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது தொகுதியில் முன்னெடுக்கக்கூடிய நிகழ்வுகள் குறித்த கலந்தாய்வு
#நவம்பர் 27 அன்று *மாவீரர்கள் தினம்* அனுசரிக்கும் விதமாக நமது தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடத்தி குருதி கொடை வழங்கி வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டும் குருதிகொடை முகாம் நடத்துவது குறித்த கலந்தாய்வு.
#மேலும் தலைமை அறிவுறுத்தலின்படி புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் நமது கட்சியின் மாத இதழான *புதியதொரு தேசம் செய்வோம்* சந்தாதாரராக ஆக வேண்டும். அதைக் குறித்த கலந்தாய்வு.
#இனிவரும் காலங்களில் நமது தொகுதியில் முன்னெடுக்கக்கூடிய செய்யக்கூடிய நிகழ்வு குறித்த கலந்தாய்வு
எனவே தொகுதியை கலந்தாய்வு கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*இவண்*
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நிர்வாகம்
நன்றி
நாம் தமிழர்💪