குவைத் செந்தமிழர் பாசறையின் எட்டாம் ஆண்டு குருதிக் கொடை முகாம்

224

:

எம் மொழி காக்க, எம் இனம் காக்க, எம் மண் காக்க, எம் மானம் காக்க தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் எம் குலசாமிகளின் நினைவைப் போற்றும் விதமாக,
செந்தமிழர் பாசறை-குவைத் நடத்திய எட்டாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு, ஜாப்ரியாவில் அமைந்துள்ள மத்திய குருதி வங்கியில்,
25.11.2022 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை 100க்கும் மேற்பட்ட உறவுகள் பங்கேற்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மருத்துவப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்.நரேசு இன்பத்தமிழன், பாசறையின் துணைத் தலைவர் திரு. சு.சந்திரமோகன் அவர்களின் தலைமையிலும் பாசறையின் செயலாளர் திரு. க.செந்தில் தமிழன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழ் இனவுணர்வோடு கலந்து கொண்டு, தொடங்கி வைத்து, வாழ்த்துரையாற்றி சிறப்பித்த எங்களின் வணக்கதிற்குரிய டி.வி.எஸ் குழுமத்தின் நிறுவனர் “வெற்றித்தமிழர்” ஐயா முனைவர் செ.மு. ஐதர் அலி அவர்களுக்கும், இக்குருதிக் கொடை நிகழ்விற்கு வருகை புரிந்து மேலும் சிறப்பித்த குவைத் தமிழ் சோசியல் மீடியா, குவைத் தமிழ் இசுலாமிய சங்கம், ஆர்.கே.ஜி அறக்கட்டளை, வெளிநாடுவாழ் தமிழர்கள் நலச் சங்கம், மனிதநேய கலாச்சார பேரவை, குவைத் தேமுதிக, குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் போன்ற அமைப்புகளைச் சார்ந்த மதிப்பிற்குரிய நிர்வாகிகளுக்கும், நினைவேந்தல் உரை நிகழ்த்திய அவ்வமைப்புகளின் பேச்சாளர்களுக்கும் குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக நன்றிகளும் எமது பேரன்பும.
குருதிக்கொடையின் இறுதி நிகழ்வாக மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருமதி சித்ராதேவி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செல்வன் கிசோர் கண்ணன் அவர்கள் அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்றதுடன் திருமதி. சாந்தி, திரு. சாந்தகுமார், திரு. பூமிநாதன், திரு. முருகேசன் தேவகி, திரு. அருண், திரு. முகமது அலி, திரு. கல்யாண முருகேசன் ஆகியோர்களால் வீர வணக்க உரைகள் நிகழ்த்தப்பட்டது.
திரு. ஜார்ஜ் அவர்களின் நன்றியுரையுடன் மாலை 6 மணிக்கு குருதி கோடை நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து மிகவும் பொறுப்புணர்வோடு நடத்திய மகளிர் பாசறைத் தலைவி திருமதி. சித்ரா தேவி மற்றும் துணைத் தலைவி திருமதி இரா. சாந்தி அவர்கள் மற்றும்
 தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மினா அப்துல்லா மண்டலங்களின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், மேலும் வாகனங்களை ஒருங்கிணைத்து உறவுகளை திரட்டி வந்த எமது பேரன்பிற்குரிய பொறுப்பாளர்களான,
திரு. முருகேசன் தேவகி
திரு. கார்த்திகேயன்
திரு.மு.வாழ்த்திவேல்
திரு. யாதவராஜா
திரு.யோகாநாத்
திரு.க. தமிழன் ஜார்ஜ்
திரு.பாஸ்கர் முருகேசன்
திரு.முத்துகிருஷ்ணன்
திரு.முகமதுஅலி
திரு. ரியாஸ்
திரு. புரூக்கல் ரகுமான்
திரு. பூமிநாதன்
திரு. சுல்தான்
திரு. ப.கண்ணன்
திரு.ஆறகழூர் அருள்,
 உணவு, பழம், பழச்சாறு, வாகனம், தண்ணீர் மற்றும் பொருளாதார உதவிகள் செய்து பாசறைக்கு துணையாய் நின்றனர்
முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம்
அடுத்த செய்திபண்ருட்டி சட்டமன்ற தொகுதி – காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்  நிகழ்வு