நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதியின் உழவர் பாசறைச் செயலாளர் ஐயா கிறித்துதாஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
(1/3)

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த ஐயா கிறித்துதாஸ் அவர்களின் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.
(2/3)
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கிறித்துதாஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)


