கருநாடகம் தங்கவயல் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

63

26.9.22 அன்று மாலை 6.00 மணியளவில் தங்கவயல் நாம்தமிழர் கட்சியின் சார்பாக . தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு .கோவலன் வரவேற்புரையாற்ற, அகவணக்கம் உறுதி மொழியை தினேசு முன்னெடுக்க, தீப வணக்கத்தை கருநாடக மாநில ஒருங்கினைப்பாளர் ஐயா. வெற்றிசீலன் அவர்கள் முன்னெடுத்தார்,மலர் வணக்கத்தை மூத்த தமிழ் பற்றாளர் ஐயா செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார் ,ஈகைச்சுடர் திலீபனின் தியாகத்தை போற்றும்வகையில் ஐயா காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய கவிதையை இளங்கோ அவர்கள் வாசிக்க,அதன்பின் சம்பத் அவர்கள் நினைவேந்தலுரையாற்றினார், தொடர்ந்து கருநாடக மாநில ஒருங்கினைப்பாளர் ஐயா வெற்றி சீலன் அவர்கள் எழுச்சியுரையாற்ற கோலார் மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு. அகசுடின் அவர்களின் நன்றியரையுடன் நினைவந்தல் நிகழ்வு நடைபெற்றது