வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது! – சீமான் கருத்து

103

ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்து நாட்டைத் துண்டாடியக் கொடும் அநீதி, வரலாற்றில் கறுப்புப்பக்கமாய் இருக்கையில் மீண்டும் அதேபோன்றதொரு செயலுக்கு அடித்தளமிடும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு வாய்ப்பளித்தது போல வந்திருக்கும் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல!

1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதே நிலைமையே நீடிக்க வேண்டும் எனக்கூறியிருக்கும் நிலையில், அச்சட்டத்துக்கு முற்றிலும் நேர்மாறான வகையில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரியார் பெயரில் உணவகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!