பத்திரிகையாளர்களைத் தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா? – சீமான் கண்டனம்

116

பத்திரிகையாளர்களைத் தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா? – சீமான் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

நாடறிந்த ஊடகமான நக்கீரனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங்களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதியரசர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது, தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர்புடையக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும், நக்கீரன் பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை கண்டறிந்து கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகாவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்