கிருட்டிணகிரி மாவட்டம் கள்ளகுறிக்கி கிராமத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரிகளை மூடக்கோரி ஒன்றிய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டல,மாவட்ட, தொகுதி, ஒன்றிய,நகர, பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளும், கல்லகுறிக்கி கிராம பொதுமக்களும் கலந்துகொண்டனர்.