வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் நமது தமிழ்மொழியில் இல்லாது பிறமொழிகளில் இருப்பதை, கையூட்டு பெற்றுக்கொண்டு, அலட்சியப் போக்காக கண்டுகொள்ளாமல் அரசாணைக்கெதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிற, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேற்று மொழிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நமது மொழியில் உடனடியாக மாற்றவும், “தமிழ்கடவுள் முருகன்” வேடமணிந்து இன்று 04/07/2022 அன்று நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.