மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

119
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

அதன் ஊடாக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்களை 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் தொகுதி அலுவலகத்தில் இருந்து வாகனத்தின் மூலம் சென்னை திருவொற்றியூர், இராதாகிருஷ்ணன் நகர் எல்லையம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடன் நாடாளுமன்ற தொகுதி பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன்,தென் சென்னை மாவட்ட செயளாலர் திரு.கடல் மறவன்,தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு. விநாயகமூர்த்தி,மயிலாப்பூர் தொகுதி திரு.ஆல்பர்ட் ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை,வட்ட பொருப்பாளர்களும் மற்றும் மயிலாப்பூர் நாம் தமிழர் உறவுகளும் உடனிருந்தனர்.
முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – ஐயா கக்கன் புகழ் வணக்கம்
அடுத்த செய்திராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்