துயர் பகிர்வு: நத்தம் தொகுதி யோகநாயகி மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

169

நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் துணைவியார் யோகநாயகி அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப் பேரிழப்புக்கு ஆட்பட்டு, கைக்குழந்தையோடு நிற்கும் தம்பியின் கொடுந்துயர நிலையறிந்து கலங்கித் தவிக்கிறேன்.

தம்பியின் துணைவியார் யோகநாயகி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டுக் களம்கண்டவரென்பதையும், தம்பியின் இனமானச்செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணைநின்றவர் என்பதையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

உற்றதுணையை இழந்துவாடும் தம்பி அலெக்ஸ் பாண்டியனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

யோகநாயகி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி