முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3…

4

மதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அதில் மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற செய்தி துயரத்தை மேலும் அதிகரிக்கச்செய்கிறது.
(1/3)

மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசு, தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

(2/3)

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும்!

https://bit.ly/3K6uWZF

@CMOTamilnadu @mkstalin

(3/3)

முந்தைய செய்திதன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…
அடுத்த செய்திகழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன்,…