கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு

62

 

*கவுண்டம்பாளையம் தொகுதிக்கு* உட்பட்ட நேரு நகர் மேற்கு,நேருநகர் கிழக்கு, கோல்டுவின்ஸ்,சித்ரா ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி புதிய வார்டுகள் 5, 6, 7 மற்றும் 8 களின் மறுசீரமைப்பை தெளிவுபடுத்துதல் மற்றும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பகுதி கலந்தாய்வானது தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை 2/01/2022 அன்று மதியம் 2 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது.

பகுதி உறவுகளிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
தொகுதி பொறுப்பாளர்கள் பகுதி பொறுப்பாளர்களோடு ஆலோசனை செய்து இறுதி வேட்பாளர்களை உறுதி செய்வார்கள்.

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு வேட்பாளராக தன்னை அடையாளப்படுத்திய உறவுகளுக்கும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்நிகழ்வை மதிய உணவோடு ஒருங்கிணைப்பு செய்த பகுதி பொறுப்பாளர்கள்
குழந்தைசாமி ஐயா மற்றும்
செபஸ்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.