தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி

68

டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் கருப்பசாமி கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் உதவியுடன் கோவில்பட்டி தொகுதியில் வைத்து நடத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வை நாம் தமிழர் கட்சி தகவல்தொழில்நுட்பப் பாசறை மாநில செயலாளர் மதன் நெடுமாறன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

அவர் இணையத்தை கையாளுவதைப் பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துவது பற்றியும், 2022 கட்டமைப்புக்கான முறைகளைப் பற்றியும் விளக்கினார். பின்பு கலந்து கொண்ட தொகுதிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

நிகழ்வு இறுதியில் சிறந்த தொகுதிகளை ஊக்கப்படுத்தும்விதமாக விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த கலந்தாய்வை சிறப்பாக நடத்த கோவில்பட்டி தொகுதி, சிவகாசி தொகுதி, பரமக்குடி தொகுதி, முதுகுளத்தூர் தொகுதி, விளாத்திகுளம் தொகுதி, விருதுநகர் தொகுதி தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு
அடுத்த செய்திகோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு