கோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு

22

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கோவை சின்னவேடம்பட்டி கற்பகம் பஞ்சாலையின் பெண் தொழிலாளி தாக்கப்பட்டமைக்கு ஆலை உரிமையாளரை கைது செய்யக்கோரியும்,கோவையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் internal complaints committee அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக கோவை காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார் இ.கா.ப. அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகளிர் பாசறை உறவுகளுக்கும், மேட்டுப்பாளையம்,கவுண்டம்பாளையம்,கிணத்துக்கடவு,தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மிக்க நன்றிகள்.

இந்நிகழ்வை முன்னெடுக்கச் சொல்லி வழிநடத்திய மாநில செயலாளர் திரு.விசயராகவன் அவர்களுக்கு நன்றிகள்.
நிகழ்வினை வழிநடத்திய மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா அவர்களுக்கும் நன்றிகள். இதில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் மகளிர் பாசறை சகோதரி ரம்யா. உமா ஜெகதீஸ். ராமகிருஷ்ணன் சேக் அப்துல்லா ஜீவானந்தம். ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

நன்றி.வணக்கம்.
நாம் தமிழர்.