கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

13

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக 11.12.2021 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரி கார்த்திகா அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள அநேக பொறுப்பாளர்களும் உறவுகளும் இதில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.