ஆத்தூர்(சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ..சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

7

விடுதலை போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளை* முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு 05/09/2021 அன்று பிற்பகல் 1.00 மணியளவில், ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டு நமது பாட்டனார் வ.உ. சிதம்பரனார் அவர்களின் திருஉருவ படத்திற்க்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கு பெற்றனர்.

நன்றி!
செய்தி வெளியீடு
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522