ஆத்தூர்(சேலம்) எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

10

05/08/2021 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் ஆத்தூர் மணிகூண்டு அருகில், சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எரிபொருள் (பெட்ரோல்- டீசல்) மற்றும் எரிகாற்று உருளை ஆகியவைகளின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ. செகதீசபாண்டியனதலைமையில், மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. மு.க. சின்னண்ணன் அவர்கள் முன்னிலையில் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. மேலும், இந்த ஆர்பாட்டத்தில் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522