இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன்.
(1/3)
#Donate2TNCMPRF @CMOTamilnadu @mkstalin

கொரோனா தீவிர தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தமிழ் சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க அனுமதி, பள்ளி-கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயம்செய்தல், 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திவைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாம்தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தினேன்.
முதல்வருடனான இச்சந்திப்பின்போது உடன் வந்திருந்த 'இயக்குநர் இமயம்' அப்பா பாரதிராஜா அவர்களும் தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். முதல்வரிடம் எழுவர் விடுதலையை வலியுறுத்தியபோது விரைவில் நிறைவேறும் என்று உறுதியளித்தார். (2/3)

