மருத்துவராகும் பெருங்கனவை வர்க்கவேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

96

நாட்டின் பன்முகத்தன்மைக்கெதிராகவும், கூட்டாட்சிக்கெதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத்தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும், மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத் தன்னாட்சியையும், மாநிலத் தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதிசெய்ய, மருத்துவராகும் பெருங்கனவை வர்க்கவேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திசிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்