உலகத்தமிழர் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், 'உலக முதன்மொழி' ஆசிரியருமான ஐயா இறையெழிலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழ்த்தேசிய அரசியலின் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகவும், தனிப்பட்டு என் மீது கொண்டிருந்த பேரன்பின் காரணமாகவும் சட்டமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக வெல்ல வேண்டுமெனக் கூறித் துணை நின்றவர் ஐயா இறையெழிலன் அவர்கள்.
(2/3)

தன் வாழ்நாள் முழுவதையும் உலகத்தமிழர்களின் ஓர்மைக்காகவும், நலனுக்காகவுமே செலவிட்ட ஆகச்சிறந்த செயற்பாட்டாளரான ஐயா இறையெழிலன் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
ஐயா இறையெழிலன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)