மே-18, இன எழுச்சி நாள்
இன்று மாலை சரியாக 6:10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
(1/3)

கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், இனப்படுகொலை நாளை நினைவுகூர உறவுகள் யாவரும் தத்தம் வீடுகளிலேயே நினைவேந்தலை முன்னெடுத்து இன விடுதலைக்களத்தில் நமது உறவுகள் பட்ட பெருந்துயரினை இல்லங்களிலே இருந்தவண்ணம் உலகம் முழுமைக்கும் பரப்புரை செய்திடுவோம்!
(3/3)
ஈழப்போரின் இறுதி நாட்களில் உப்பு கூட இல்லாத கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
(2/3)

