சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா ஒருங்கிணைப்பு தொடர்பாக

6

க.எண்: 2021020051
நாள்: 02.02.2021

சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா ஒருங்கிணைப்பு தொடர்பாக

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா வழமைபோல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நமது தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திருமணம் நடைபெற்ற “திருப்போரூர் திருமுருகன் கோவில் அருகில்” வருகின்ற 07-02-2021 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் முருக வழிபாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பறையிசை, சிவவாத்தியம், தமிழர் மெய்யியல் வரலாற்று ஆய்வாளர்களின் சிறப்புரை மற்றும் செந்தமிழன் சீமான் அவர்களின் மெய்யியல் மீட்சியுரை என இவ்விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்று முருகனின் பெரும்புகழைப் பேரெழுச்சியோடு கொண்டாடிடப் பேரன்புடன் அழைக்கிறோம்.

கடந்த ஆண்டு கொரானா நோய்த்தொற்று பரவலையொட்டி போடப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்ட்ட மக்களின் துயர்துடைப்புக்கானப் பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் என நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் திருமுருகப் பெருவிழாவை முன்னெடுப்பதற்குப் பொருளாதாரச் சிக்கல் பெருந்தடையாக இருக்கிறது. ஆரியமும் திராவிடமும் ஒருசேர தமிழர் மெய்யியலைக் வாக்கு அரசியலுக்காகத் தூக்கிப்பிடிக்கும் இவ்வேளையில் தமிழர் மெய்யியல் மீட்சிக்காக உளமாரப் போராடிவரும் நாம் இப்பொருளாதார நெருக்கடியை தகர்த்து திருமுருகப் பெருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்த வேண்டிய கடமையும் காலத்தேவையும் நமக்கு இருக்கின்றது. ஆகையால், நாம் தமிழர் உறவுகளும் மற்றும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும் இப்பெருவிழாவிற்குத் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை விழா ஒருங்கிணைப்பாளரின் வங்கிக் கணக்கில் நேரிடையாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நிதியுதவி வழங்கவேண்டிய வங்கிக்கணக்கு விவரம்:
மைக்கேல் வின்சென்ட் சேவியர் (தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்)
கண்க்கு எண்: 106201506968
ஐசிஐசிஐ வங்கி, திருவான்மியூர் கிளை,
IFSC CODE: ICIC0001062

மேலும் தொடர்புக்கு: முனைவர் செந்தில்நாதன் (+91-94422 48351)
வீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு