ஜெயங்கொண்டம் தொகுதி – வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

458

 

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக ஆண்டிமடம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருக்களப்பூர் கிராமத்தில் (06/01/2021) அன்று பெய்த கனமழை காரணமாக ஏரிஉடைந்து வெள்ளநீர் ஊர்முழுவதும் சூழ்ந்த காரணத்தால் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வந்த செய்தியறிந்து களத்தில் இறங்கி நாம்தமிழர்புலிப்படை . 

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையில், தொகுதி பொறுப்பாளர்கள்மற்றும் நாம்தமிழர் உறவுகள் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.., மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின்  சார்பாக கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகள் மற்றும் இழப்பீடுகள் கிடைக்க ஏதுவாக மக்களிடம் *கோரிக்கை_மனுக்கள்* வாங்கப்பட்டு *ஆண்டிடம்_வட்டாட்சியரிடம்* முறையிட்டு உரிய இழப்பீடுகள் பெற்றுத்தருவோம் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் *மாவட்டத்_தலைவர்* சரவணன் , *தொகுதி_செயலாளர்* பிரபாகரன், *பொருளாளர்* கோபாலகிருஷ்ணன், *தகவல்தொழில்நுட்ப_பாசறை_செயலாளர்* ஜெயக்குமார்,தொகுதி இளைஞர்பாசறைசெயலாளர் அய்யப்பன், ஆண்டிமடம் ஒன்றியநிர்வாகிகள் கவியரசன், பாலமுருகன் ,செல்வம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉறுதுணையாக நின்ற திருக்களப்பூர்கிராமத்தைச் சார்ந்த உறவுகள் வெற்றிவேல் மற்றும் சுந்தர் ஆகியோர் பங்கேற்று வழிநடத்தி சென்றனர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் – SDPI கட்சியினர் நடத்திய வேளாண் சட்ட திருத்தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரின் கண்டன உரை