தமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்! – சீமான் அழைப்பு

1089

தமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்! – சீமான் அழைப்பு

“தொட்டு பார்த்தால் வெறும் காகிதம்”, “தொடர்ந்து படித்தால் பேராயுதம்” என்ற வாக்கியங்கள் புத்தகத்தின் மகத்துவத்தை நமக்குத் தெளிவாக விளக்குகிறது. அந்த வகையில் தமிழினம் வரலாற்றில் மீளெழுச்சி கொள்வதற்கு வரலாற்று ஆய்வு நூல்கள் பெருந்துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. உலகப்பெருந்தலைவர்கள், தத்துவவியலாளர்கள் என அனைவரும் தனது வாழ்நாளை அதிக அளவில் புத்தகங்களோடு செலவிட்டவர்கள் தான் என்கிறது வரலாறு.

தமிழர் வரலாற்றில் நிறைய அறிஞர்கள் பண்டையத் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை, வரலாற்று கூறுகளை, மொழியின் தொன்மைகளை மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார்கள். அவற்றில் பல புத்தகங்கள் கிடைப்பது இன்று மிக அரிதாக உள்ளது. இத்தகைய காலகட்டத்தில், தமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்கள், ஏறக்குறைய 124 புத்தகங்களை எழுதி இருப்பதும், அந்தப் புத்தகங்கள் அனைத்தும் அசைக்கமுடியாத ஆய்வுத்தரவுகளோடும், உலக ஆய்வுகளின் ஒப்புநோக்கோடும் எழுதப்பட்டவை என்பதையும் என்னைப்போலவே நீங்களும் அறிவீர்கள். அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் நான்கு தவணையாக வெளியிட ஐயா அவர்களின் ஆய்வுக் குழுமம் தயாராகி வருகிறது.

இன்னும் ஓரிரு மாதத்தில் முதல் தவணைக்குரிய 25 நூல்கள் வெளிவர இருக்கிறது. இந்த 25 புத்தகங்களும் முன்பதிவு திட்டத்தின் கீழ் ரூபாய் 10000/-க்கு வழங்க இருக்கிறார் [மொத்த புத்தக விலை ரூபாய் 13000/-]. இத்தகைய முன்பதிவு திட்டத்தில் அனைவரும் இணைந்து பயன்பெறவும், நீங்கள் இந்த முன்பதிவு திட்டத்தில் அதிகப்படியாக இணைவதின் மூலம் ஆய்வர் மா.சோ.விக்டர் அவர்களின் அனைத்து புத்தகங்களும் விரைவாக வெளிவர உதவியாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் விவரங்களுக்கு ஆய்வர் மா.சோ.விக்டர் ஆய்வு அறக்கட்டளையைத் தொடர்புகொள்ளவும்:

ஆய்வர். மா. சோ. விக்டர் : +91-9843273914 /
முனைவர். செந்தில்நாதன் : +91-9442248351

அனைவரும் ஐயாவின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு திட்டத்தில் இணைந்து ஆய்வு நூல்கள் வெளிவர உதவும் படி வேண்டுகிறேன்

புரட்சி வாழ்த்துகளுடன்

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்தமிழர் கட்சி

முந்தைய செய்திமுதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு