நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் அன்னை கல்வி குழுமத்தின் செயலாளருமான என்னுயிர் தம்பி மு.இ.ஹீமாயூன் கபீர் அவர்களது தாயாரும் மறைந்த வாப்பா ஜனாப் முகமது இப்ராகிம் அவர்களது மனைவியுமான நமது அம்மா மு.பாத்திமா பீவி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.


அம்மாவை இழந்து வாடுகிற அண்ணன் அப்துல் கபீர் மற்றும் என் தம்பிகள் ஹீமாயூன்,அன்வர், யாசின் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, குடும்பத் துயரில் பங்கேற்கிறேன்.
அம்மாவிற்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.


