குவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

120

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று
குவைத் செந்தமிழர் பறையிசைக்குழுவின் பறையிசைப் பயிற்சி காலை அபுகலிபாவில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குவைத் செந்தமிழர் பாசறையின் பகுதி களப்பணிகள் பாகில், சால்மியா,மால்யா மற்றும் சுவைக் ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கையும்,உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பின்னர் மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை கப்த் குடியிருப்பு பகுதியில் நடைப்பெற்ற ஒன்றுகூடலில் எதிர்வரும் தேர்தல் 2021ல் நமது இலக்கும் உறவுகளுடைய பங்களிப்பும் பற்றிய ஆலோசனைகள், உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
அடுத்த செய்திகம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை