திண்டுக்கல் தொகுதி – குடகனாறு மீட்பு போராட்டம்

112

குடகனாறு நீர் பங்கீடு முறைபடுத்த கோரியும், நீர் வழிப்பாதையில் குறுக்கே உள்ள தடுப்பணையை நீக்க கோரியும் போராடும் விவசாயிகளை தனிப்பட்ட முறையில் மிரட்டும் அதிகாரவர்கத்தினை கண்டித்தும், இந்த பிரச்சனை காரணமாக போராட வீதிக்கு வந்த பொது மக்களின் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து செ.வெற்றிக்குமரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டு கைதாகி பின் விடுவிக்கப்பட்டனர்.