தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு மாநில உறவுகள், தொகுதி உறவுகளின் சார்பில் வீரவணக்க நிகழ்வும், சுடர்வணக்க நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டு அண்ணன் திலீபன் அவர்களின் கனவை நினைவாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.