நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்

27

16.09.2020 புதன்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி பாலக்கரை பகுதியில் பிரபாத் தியேட்டர் அருகில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி மண்டல செயலாளர் பொறியாளர் ஐயா.சேது மனோகரன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு அவர்கள் தலைமையில், மாணவர் பாசறை திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் திரு.தினேஷ் இந்நிகழ்வினை முன்னெடுத்தார். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் சுப. கண்ணன் அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் திரு.விஜயகுமார், திருச்சி திருவரங்கம் தொகுதி செயலாளர் திரு கோபி, திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் திரு.ஆசைத்தம்பி, திருவெறும்பூர் தொகுதி செயலாளர் திரு சோழசூரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மாணவர் பாசறை உறுப்பினர்கள் பொதுமக்கள் வட்ட பொறுப்பாளர்கள் 70 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.