குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்

120

குவைத் செந்தமிழர் பாசறையின் 18.09.2020) வாராந்திர ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது.
 ஆன்றோர் பேரவையின் செயலாளர் ராசேசுகுமார் அவர்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கமும், மாவீரர்கள் மற்றும் பொதுமக்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி வழங்கினார்.
வரவேற்புரை: பாசறையின் துணைத்தலைவர் தமிழன் ரகு வழங்கினார்.
சிறப்புரையாற்றிய வளைகுடா துணை ஒருங்கிணைப்பாளர் கல்யாண முருகேசன் அவர்கள் அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தல் இலக்கு2021 என்ற தலைப்பில் பல கருத்துக்களை வழங்கினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட கலந்தாய்வில் இலக்கு 2021 முன்னெடுப்புகள் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இன்றைய களப்பணியாக நமது மூத்த உறுப்பினர் அண்ணன் அருள் துரைசாமி அவர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் பல நண்பர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் இருப்பதாக கூறினார். அண்ணாரது அழைப்பின் பேரில்பொறுப்பாளர்களுடன் அங்கே சென்றோம்.
அங்கு பத்துக்கும் மேற்பட்ட புதிய உறவுகள் நம்முடன் நாம் தமிழர் கட்சியில் இன உணர்வுடன் தம்மை இணைத்துக்கொண்டனர். 

முந்தைய செய்திகொடியேற்றும் விழா மரக்கன்றுகள் நடும் விழா – செய்யூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி