காயல்பட்டினம் – நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

45

*நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்*
********************

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையிலிருக்கும் *நீட் என்கிற மருத்துவ நுழைவுத்தேர்வை(NEET) திரும்ப பெறக்கோரி 16/09/2020 அன்று புதன்கிழமை காலை 11 மணி அளவில் காயல்பட்டணம் வள்ளல் சீதக்காதி திடலில் வைத்து *நாம் தமிழர் கட்சியின் சார்பில்* கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் *திருச்செந்தூர் தொகுதி மற்றும் காயல் நகர நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்* பெருந்திரளாக கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களும், உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

*இவண்,*
*நாம் தமிழர் கட்சி(6383651312)*
*காயல்பட்டினம், திருச்செந்தூர் தொகுதி.*