அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

21

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ‘கும்மங்குடி ஊராட்சியில்’ நடைபெற்றது. கலந்தாய்வில் கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட கும்மங்குடி, மீனிகந்தா, ஒடுத்திக்காடு, கல்லுக்குடியிருப்பு, பொந்துப்புளி, தல்லாம்பட்டி, காத்தறிச்சான்பட்டி, நாட்டாம்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் அய்யனார்பட்டி கிராமங்களை சேர்ந்த உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர், அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும், அரிமளம் நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்களால் “கும்மங்குடி ஊராட்சி பொறுப்பாளர்கள்” நியமிக்கப்பட்டனர்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை