அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

16

30.8.2020 அன்று காலை 7.30 மணி தொடங்கி 11:30 மணி வரை, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கருக்கு-ஆவிண் பால்ப்பண்ணை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் விதத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த சீமை கருவேலமரங்களை அகற்றும் பணியில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறவுகள் ஈடுபட்டனர். இடையூறாக இருந்த அனைத்து கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

நாங்கள் மரத்தை அகற்றி கொண்டிருக்கும்போதே சில வாகன ஓட்டிகள் நின்று நாங்கள் செய்யும் பணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தது நெஞ்சை நெகிழ வைக்க தருணமாக இருந்தது.

களப்பணியில் ஈடுபட்ட அத்தனை தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.