அம்பத்தூர் தொகுதி – தவறான கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

7

*தவறான கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது-அம்பத்தூர்*

உறவுகளுக்கு வணக்கம்!

நமது உறுப்பினர் முஸ்தபா இவர் 81வது வட்டத்தில் உள்ளார், 27.8.2020 அன்று அரசு மருத்துவமுகாம் என்று வீட்டிற்கு வந்து கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்,
மேலும் அவரது வீட்டை சுற்றி தகரத்தால் தடுப்பு எழுப்பியுள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் 28.8.2020 அன்று தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு *கொரோனா இல்லை* என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இது குறித்து 29.8.2020 காலை 8 மணியளவில் 81வது வட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு பிறகு 11 மணி அளவில் ஆவடி மாநகராட்சி(81வது வட்டத்தில் சில பகுதிகள் ஆவடி கீழ்வரும்) அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டோம்.
நகராட்சியில் விசாரித்த போது இந்த பரிசோதனை அறிக்கை கொடுத்த மருத்துவரை சந்திக்குமாறு அறிவுறுத்தினர்.

அடுத்து பிற்பகல் 2 மணி அளவில் அந்த மருத்துவரையும் பார்த்து கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, மாலையே, தகரம் அகற்றப்பட்டது.

ஐயா முஸ்தபா அவர்களுக்கு தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்க களம் கண்ட அத்தனை பொறுப்பாளர்கள், உறவுகளுக்கும் மற்றும் நம்முடன் உறுதுணையாக நின்ற ஆவடி உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், புரட்சி வாழ்த்துக்கள்…