வல்வில் ஓரி புகழ்வணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி

321

02.08.2020 கொல்லிமலை

ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடி 18 வல்வில் ஓரி தினமாக கடைபிடிக்கப்பட்டு அரசு சார்பில் கொல்லிமலையை ஆண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் மன்னன் வல்வில் ஆதன் ஒரிக்கு அரசு சார்பில் விழா நடைபெறும். இந்த ஆண்டு கோரோனா தொற்று அச்சம் காரணமாக விழா நடைபெறவில்லை. எனினும் ஆடி 18 அன்று சமூக இடைவெளியுடன் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து 02.08.2020 அன்று வல்வில் ஓரி தினத்தன்று கொல்லிமலை ஒன்றியம் செம்மேட்டில் உள்ள தமிழ்ப்பெரும்பாட்டன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் சிலைக்கு நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக முறையான அனுமதியுடன் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் தொகுதி