மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நீலகிரி

55

நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியிலுள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது..
கடந்த 17-7-2020 அன்று கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கு மான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதில் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழில் முன்வைத்த போது ,பொது மேலாளர் அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் பேச வேண்டும் என கட்டளையிட்டுள்ளார் ! பின்பு மேலாளர் கலந்தாய்வில் இருந்து வெளிநடப்பு செய்தார் இச்சம்பவம் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் இடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதை அறிந்த குன்னூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பொது மேலாளர் அவர்களை கண்டிக்கும் வகையில் கடந்த 24 -7-2020 அன்று குன்னூர் வீதி தெருவில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை எடுத்து தொழிற்சாலைக்குள் இயங்கிவரும் தமிழ் சங்க பிரதிநிதிகளை சந்தித்து தமிழைக் காக்க எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று நாம் தமிழர்
பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

முந்தைய செய்திகபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – கீழப்பென்னாத்தூர் தொகுதி