தீரன் சின்னமலை- 215-ஆவது வீரவணக்க நிகழ்வு – மொடக்குறிச்சி

41

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வருடா வருடம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஓடாநிலையில் பேரேழுச்சியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனால், 215 ஆவது நினைவு நாளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி ஒவ்வொரு கட்சியின் சார்பாக ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி நாம் தமிழர் கட்சி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் லோகு பிரகாசு, துணைச் செயலாளர் சந்திரசேகர், கொடுமுடி ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சந்தோஷ் மற்றும் அரச்சலூர் பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

நன்றி,
நாம் தமிழர் கட்சி,
மொடக்குறிச்சி தொகுதி.

தொடர்புக்கு: 9488832118

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி
அடுத்த செய்திதீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு – மேட்டூர்