விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற்று உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் – ஆத்தூர்

3

நாம்தமிழர் கட்சி
சேலம் மாவட்டம் (கிழக்கு
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
5 /7 /1972 அன்று மின்சார கட்டண உயர்வை எதிர்த்து நடந்த விவசாயிகள் உரிமை போராட்டத்தில் குண்டடிபட்டு உயிர்நீத்த பெத்தநாயக்கன்பாளையம் முட்டாசு, நா. விவேகானந்தம், க. ஆறுமுகம், மணி, ச. பிச்சமுத்து, ச. முத்துசாமி, ந. சாந்த மூர்த்தி, ரா. கோவிந்தராஜன்மற்றும் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய தியாகிகளுக்கு (5/7/ 2020) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையத்தில் அவர்கள் நினைவாக நடப்பட்டுள்ள வீரக்கல் அருகே வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*
7845437073