மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கக்கன் புகழ் வணக்கம் – பல்லடம் தொகுதி

21

21/06/2020  ஞாயிற்றுக்கிழமை பல்லடம் தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரத்னா மனோகர் அவர்கள்  தலைமையில்  மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது
எளிமையின் அடையாளம் *ஐயா கக்கன்* அவர்களுக்கு புகழ் வணக்கமும், 1970 இல் கருணாநிதி ஆட்சியில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் அரச வன்முறைக்கு இலக்காகி இன்னுயிரை ஈந்த பல்லடம்  க. அய்யம்பாளையம் *சுப்பையன்* மல்லே கவுண்டன் பாளையம்*முத்துக்குமாரசாமி* திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த  *மாரப்பகவுண்டர்* , *ஆயிக்கவுண்டர்,*  *இராமசாமி கவுண்டர்* ஆகியோர் உட்பட 19 பேரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் செயற்கள செயலி உருவாக்குனர் *ஐயா லிங்குசாமி* அவர்கள்இலண்டனிலிருந்தும்கோவை நாடாளுமன்றத் தொகுதியின் *செயற்கள செயலி பொறுப்பாளர்  கிசோர்* அவர்கள் கோவையிலிருந்தும் செயற்கள செயலியைப் பயன்படுத்தும் முறை குறித்து இணையவழி வகுப்பெடுத்தனர்.செயலியை முழுமையாக 100%  பயன்படுத்தும் தொகுதியாக பல்லடம் தொகுதி மாறியுள்ளதன் அடையாளமாக முதன்முதலில் முறைப்படி இந்த மாதாந்திர பொது கலந்தாய்வு செயலியின் வழிகாட்டுதல்படிமிகச் சிறப்பாக நடைபெற்றது.அடுத்த நிகழ்வாக ஐயா *பெருஞ்சித்திரனார்* அவர்களின் தமிழ் தேசியப் பாதையில் பயணிப்பவரும் வேளாண் பெருங்குடி மக்களின் பாதுகாவலருமான சிறப்பு விருந்தினர் ஓடக்கல்பாளையம் தமிழ்த்திரு. *தென்னவன் அரசேந்திரன்* அவர்கள் சிறப்பானதொரு தமிழ் தேசிய வகுப்பெடுத்தார்.