மருத்துவ சிகிச்சைக்காக தாயகம் அனுப்பி வைத்தல் – செந்தமிழர் பாசறை பகரைன்

13

 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதியை சார்ந்த *திரு.ஐயப்பன்* அவர்கள் பகரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர் அடி வயிற்று வலி மற்றும் இடுப்பு வலியினால்(Abdominal and Pelvic pain) சிரமம்பட்டு வந்துள்ளார். இதற்கான மருத்துவ சிகிச்சையை பகரைன் மருத்துவமனையில் பெற்று வந்தார். அந்த நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதற்காக தன்னை தாயகம் அனுப்பி வைக்குமாறு செந்தமிழர் பாசறை பகரைனுக்கு கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று அவர் தாயகம் செல்ல வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. தாயகம் செல்வதற்கான போதுமான நிதி இல்லாததால் அதற்காக உதவுமாறு கேட்டிருந்தார். அவர் தாயகம் செல்வதற்கான விமான சீட்டு தொகைக்கான நிதி உதவியை ICRF(Indian Community Relief Fund) கேட்டு இருந்தோம். அவர்களும் அதற்கான உதவியை செய்தார்கள்.

திரு. ஐயப்பன் அவர்களை *இந்திய தூதரகம்* மற்றும் *ICRF(Indian Community Relief Fund)* உதவியுடன் இன்று (05/சூலை/2020)
தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்

*திரு. ஐயப்பன் தாயகம் செல்ல உதவி செய்த இந்திய தூதரகத்திற்கு மற்றும் ICRF(Indian Community Relief Fund) செந்தமிழர் பாசறை பகரைன் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.*

இவன்,
செந்தமிழர் பாசறை பகரைன்
பதிவு செய்தது:ரஞ்சித் குமார்
கைபேசிஎண்: 973 66916211