மதுபானக்கடை திறந்திருப்பதை எதிர்த்து மனு – சாத்தூர் தொகுதி

13

இடம் – சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்
நாள் – சூலை 14

கோவிட்-19 கொரோனோ வேகமாக சாத்தூர் நகரம் மற்றும் புற பகுதிகளில் பரவிவரும் இந்த சூழ்நிலையில் அரசின் நிபந்தனைக்கு ஏற்ப வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் மாலை 3 மணியளவில் மூடிவிடுகின்றனர்.
ஆனால் அரசு மதுபானக்கடை மட்டும் இரவு 8 மணி வரை திறந்து இருக்கின்றது இதனால் மதுப் பிரியர்கள் குடித்துவிட்டு அங்கும் இங்கும் தெரிவதால் சற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இதைக் கண்டித்து சாத்தூர் வட்டாட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மனு வழங்கப்பட்டது. இது தொடர்பாக வட்டாட்சியர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

தொடர்புக்கு +919944853955