பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் – கிள்ளியூர்

9

#இனயம் #கிராமத்தில், இனயம் புத்தன்துறை ஊராட்சி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி.
கொரனா நோய் தொற்று அதிகரித்து வரும் இச்சூழலில் மக்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கபசுர குடிநீர் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட இனயம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மீனவ கிராமங்களில் கொரனா நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்த அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். நாம் தமிழர் 💪💪💪