தொகுதி கலந்தாய்வு-ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி

13

இன்று 11/07/2020 சனிக்கிழமை பெத்தநாயக்கன்பாளையம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வை குறித்த பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த கலந்தாய்வில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1.ஊராட்சி பகுதிகளில் இலவச இருசக்கர வாகன பழுதுபார்க்கும் முகாம் நடத்துதல் வாயிலாக உறுப்பினர்களை சேர்த்தல்.
2. நாம் தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மகளிர் பாசறை மூலமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் குளியல் சோப்பு தயாரிக்கும் செய்முறை பயிற்சி வழங்குதல்.
3. கிராமங்களில் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து தருதல்.
4. தொகுதி முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் ஆட்சி வரவை சுவரொட்டிகள் மூலமாக தெரியப்படுத்துதல்.
5. சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நாட்டு காய்கறி விதைகள் விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்குதல்.
6. அனைத்து ஊராட்சிகளிலும் கொடிக் கம்பம் நடுதல்.
7. மாதாந்திர சந்தாவாக ரூபாய் 100 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் செலுத்துதல்.
8.உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அச்சிட்டு வழங்குதல்.

போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

அலைபேசி: 7845437073