சாத்தான்குளம் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – நாங்குநேரி

7

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி (களக்காடு ஒன்றியம்)*

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வலியுறுத்தி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பில் *ஏர்வாடி பேரூராட்சியில்* 30.05.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்து கொண்ட உறவுகள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்

ஏற்பாடு:
திரு. *ராஜிவ் ரத்னிகுமார்* (தொகுதி துணை செயலாளர்)

தலைமை:
திரு. அலெக்சாண்டர் (தெற்கு மாவட்ட தலைவர்)
திரு.அப்பாகுட்டி(தெற்கு மாவட்ட செயலாளர்).

கலந்து கொண்டவர்கள்:

திரு.மனோகரன்(கல்லடி சிதம்பரபுரம்)
திரு.தர்மராஜ்(சீனிவாசபுரம்)
திரு.முருகப்பெருமாள்(நாங்குநேரி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர்)
திரு.சபி(பேரூராட்சி துணை செயலாளர்)
திரு‌.தமீம் தாரிக்(பேரூராட்சி செயலாளர்)
திரு.அசோக்குமார்(ஒன்றிய செய்தி தொடர்பாளர்)
திரு.சோமுசுந்தரம்(ஒன்றிய தலைவர்)
திருமதி.சத்யா செல்வகுமார் (மகளிர் பாசறை)
திரு.அந்தோணி விஜய்(தொகுதி செய்தி தொடர்பாளர்)

உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இவண்:
நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள்

நன்றி.

நாம் தமிழர்.