காவல் நிலைய முற்றுகை போராட்டம் – சாயல்குடி

292

**┅━❀••முக்கிய அறிவிப்பு•• ❀━┅*
அன்பு உறவுகளுக்கு வணக்கம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நடத்தும் காவல் நிலைய முற்றுகை போராட்டம்*

நரிப்பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரமற்ற கிணற்றின் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நீர். சுகாதாரமற்றது என்று சமூக வலைதளங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ பதிவிட்டதால் அதை சரி செய்து தருகிறோம். ஊராட்சி அலுவலகம் வாருங்கள் என அழைத்து குண்டர்களை வைத்து தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது காயத்தோடு வழக்கு கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட சிவா மற்றும் சம்பவ இடத்திலேயே இல்லாத நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மீதும் பொய் வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நாளை (06.07.2020) காலை 11.00 மணியளவில் சாயல்குடியில் நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளும் தவறாது நாளை காலை 10.30 மணி அளவில் காவல் நிலையம் எதிரில் ஒன்று கூடுவோம்


முந்தைய செய்திமருத்துவ சிகிச்சைக்காக தாயகம் அனுப்பி வைத்தல் – செந்தமிழர் பாசறை பகரைன்
அடுத்த செய்திதிருச்சி அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்