கழிவுநீர் கால்வாய் சீரமைத்து புதிதாக அமைக்க கோரி மனு அளித்தல் – குமாரபாளையம் தொகுதி

88

குமாரபாளையம் நகராட்சி 14வது வார்டு ஓடக்காடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்து இடிந்து விட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இது சம்பந்தமாக அந்த பகுதி மக்களிடம் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு புகார் வந்தது.

இதையடுத்து
கழிவுநீர் கால்வாய் சீரமைத்து புதிதாக அமைக்க கோரி நகர செயலாளர் கதிர்வேல் தலைமையில் நாம் தமிழர் உறவுகள் இன்று (25/07/2020) நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்