கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

32

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பில் 15/07/2020 காலை சுமார் 10 மணி அளவில் தியாகதுருகம் நகர பேருந்து நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தொகுதி செயலாளர் *ஜீவானந்தம்* அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி ஒன்றியம் வீரசோழபுரம் கிளை மந்தைவெளியில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 11 மணி அளவில் கிளை நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.