ஐயம்பாளையம் கலந்தாய்வு தீர்மானங்கள்

18

4 / 7 / 2020 சனி அன்று அய்யம்பாளையத்தில் நடந்த கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் :- 1

ஐ டி பி எல்
எரி காற்றுத் திட்டமான
இருகூர் – தேவனகந்தி
வழித்தட கருத்துக்கேட்பு கூட்டத்தை இக்கட்டான சூழ்நிலையில்
சேலம் மாவட்ட
தனித் துணை ஆட்சியர் விவசாயிகள் கூட்டத்திற்கு அழைத்து அழைப்பாணை வழங்கியுள்ளார்.
இதை நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை வன்மையாக கண்டிப்பதோடு அழைப்பாணையை திரும்பப் பெறுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்

தீர்மானம் :- 2
உதய்
மின் திட்டத்தில் இலவச மின்சாரத்தை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வழங்குவதை தடை செய்யும் போக்கில் மத்திய அரசு கொண்டுவரும் மாற்று திருத்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்

தீர்மானம் :- 3
மின்சார கட்டண குறைப்பு போராட்டத்தில்
உயிர் நீத்த விவசாயிகளை பெருமைப்படுத்தி பெருமிதம் கொள்கிறது
பல்லடம்
நாம் தமிழர் கட்சி

தீர்மானம் :- 4
உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு உண்டான உரிய இழப்பீடு தொகையை கோவை மாவட்டத்தை போல திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்க
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை பல்லடம் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் :- 5

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் 2 கூட்டத்திற்கு பின்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது அதை தமிழக முதலமைச்சர் உடனடியாக நிறைவேற்றித் தரும்படி பல்லடம் நாம் தமிழர் உழவர் பாசறை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

உழவர் பாசறை 🌾
நாம் தமிழர் கட்சி 💪
பல்லடம் சட்டமன்றத் தொகுதி 🙏🏻