கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து

206

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும்  கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து

ஐ.நா. மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்ட சூன் 23, பொதுச் சேவை நாள் காணொளி அமர்வில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றதையும், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதையும் அறிந்து மகிழ்கிறேன்.

கேரள அரசு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமின்றி, உலகின் பலநாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

தங்களின் மக்கள் பணி மேன்மேலும் சிறக்க எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

The United Nations celebrated its Public Service Day on June 23rd by honoring public servants across the world via video conference. I am immensely happy to learn that the Kerala Health Minister, K.K. Sailaja, was invited by UN as representative of Kerala Government, and honored the Government for reducing the Covid-19 infections and its related deaths by controlling the spread of the infection.

The Kerala Government has set paradigm for not just other Indian states but also for many countries.

I hereby congratulate and convey my best wishes for your future endeavours in public services.

– Senthamizhan Seeman
Chief Coordinator
Naam Thamizhar Katchi